← Back to Home 29 தொழிலாளர் சட்டங்கள் – 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்
Event 04-Oct-2026

29 தொழிலாளர் சட்டங்கள் – 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்

29 தொழிலாளர் சட்டங்கள் – 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் நலன் மற்றும் சட்டங்கள் குறித்து டெல்லியில் டாக்டர் தீபக் ஜெயஸ்வால் அவர்களுடன் சந்திப்பு புதுடெல்லி: இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தொழிலாளர் சட்ட மாற்றங்கள், தொழிலாளர்களின் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, ஊதியம், பணியிடப் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து டெல்லி பாராளுமன்ற அலுவலகத்தில் டாக்டர் தீபக் ஜெயஸ்வால் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் நடைமுறை அம்சங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதன் அவசியம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. தொழிலாளர்களின் குரல் சட்ட உருவாக்கத்திலும், சட்ட நடைமுறையிலும் உரிய முறையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.